தனிமரம் பாகம் : 3

எமது பிறப்புரிமை, குடி உரிமை, தனிமரம் பாகம் : 3, பண்ணிங்களும் "சிங்கிளா" வர்றது உண்டு, புதியமனிதன், வனச்சமூகம்

தனிமரத்தோட்டங்கள்

பாகம் :3

பாகம் :3

தனிமரம் அல்ல.

தனிமரம் அல்ல.  ஒரு தனி விதை வீரியமானதென்றால் அது உலகையே தனது ராஜாங்கம் எத்தனை வலியது என்பதை நிரூபித்துவிடும். அது நன்மை பயக்கும் தானியமாக இருக்கலாம் அல்லது தீமை விளைவிக்கும் நச்சு விதையாகவும் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் நம் உணவுக்காகவும், உலகியல் தேவைக்காகவும் உற்பத்தி செய்யும் காய் கனியில் நமக்கு உதவும் எந்திரங்கள் வரை அதனை உருவாக்கவும் போதுபயனுக்குக் கொண்டுவரும் சிராமல் தீயனவற்றிற்கு அவசியம் இல்லை. அதேசமயம் நம்முடைய எந்த சிரத்தையும் இல்லாமலே தீமை விளைவிப்பனவை மிக எளிதாக உற்பத்தியாகி அதனை விட வேகமாகப்பரவவும். பார்த்தீனியச்செடிகளும்,கருவேல முட்களும், சில நீர்த்தாவரங்களும் எவ்வித பயனும் மனித குலத்திற்கு அளிப்பதில்லை எனினும் அதன் பரவலை எவராலும் தடுக்கமுடிவதுல்லை. மிக அறிய கண்டுபிடிப்பான அனுப்பிளவினால் ஏற்படும் கதிர்வீச்சுகூட ஆக்கத்திற்கு பயன்பட்டதைவிட மனித குலம் அழியப்பன்பட்டதே அதிகம். இன்றுவரை ஒருநாட்டவரிடமிருந்து பிறநாட்டவர் தன்னைக்காப்பாற்றிக்கொள்ள என்று தற்காப்பு என்று தொடங்கி இறுதியில் தங்கள் பலம் உலகளவில் அத்தகைய ஆய்தம் சார்ந்தது என்ற மனநிளைக்குப்பாய் விட்டது. இன்னும் ஜப்பானின், ஹிரோஷிமா, நாகசாகி, சோவியத் யூனியன், பகுஷிமா டேய்சி, மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலை, இந்தியாவின் போபால் விஷவாயுக்கசிவு, அணு அழிவால் பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குல்லாகிவிடக்கூடாது என்று (நியாயப்படுத்திக்கொண்டு)கருதும்  நாடுகள்  நம்மிடமும் எதாச்சும் கொஞ்சம் கையிருப்பு இருக்கட்டுமே என்கிற கணக்கில் (இது பயமோ தற்காப்போ )இதன் தாக்கம் உலகுள் உள்ளங்கை அளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதனை தேசம் என்று அறிமுகம் செய்யும் எந்த அரசும் தங்கள் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு அம்சமாக்கியதன் பெருமை அமெரிக்காவை மட்டுமே சேரும். கொஞ்சம் அணுகுண்டுகள் இருந்தால்தான் ‘எதிரிகள்’ அஞ்சுவார்கள். அதற்கு முக்கியமாக புளுட்டோனியம் தேவை. சில அணு உலைகளைக் கட்டி இயக்கினால் அது எளிதாகக் கிடைக்கும். (உலகில் அனைவருக்கும் புற்று நோயை உருவாக்க அதிகம் வேண்டாம் ஜென்டில் மேன் ஜஸ்ட் 500 மி.கி. புளுட்டோனியம் போதும்.) 1979ஆம் ஆண்டு அமெரிக்காவில் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் இருந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட கதிரியக்க விளைவுகளினால் 135000 பேர் புற்றுநோய் கண்டு இறந்தார்கள் என்பது அவ்வரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 1986இல் சோவியத் யூனியனில் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 1.35 லட்சம்  மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதில் ஏற்பட்ட நெருப்பை அணைக்கவும் உலைக்கு மூடு விழா நடத்தவும் 40 டன்களுக்கும் அதிகமான ‘போரான் கார்பைடு’ எனும் உலோகம் பயன்படுத்தப்பட்டது., 800 டன்கள் சுண்ணாம்புக் கல், 2400 டன்கள் ஈயம், 1000 டன்கள் “காங்ரீட் கலவை” போன்றவற்றை உலையின் மீது கொட்டினார்கள். நிலத்தடியில் கதிரியக்கம் பரவுவதைத் தடுக்க அந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தைப் பிளாஸ்டிக் தகடுகளால் மூடினார்கள். ஆக, கோளாறு, விபத்து என்றால் உலைகளை மூடுவதும் பெரும் பொருட்செலவு. இதில் மிகப்பெரு சோகம் யாதெனில் அந்த உலைகளையும் வடிவமைத்த அறிவியலாளர் ‘வாலெரி லெகசோவ்’ தற்கொலை செய்துகொண்டார். நான் சொல்வது சோவியத் யூனியனில் இந்தியாவில் அல்ல. அதி இந்தியாவாக இருநாதால் இறந்தது எத்தனைபேர்? அதனைச்சொல்லி அடுத்த தேர்தலில் எப்படி ஆட்சியைகைவசப்படுத்தலாம்? என்ற கணக்கு மேலோங்கி நின்றிருக்கும்.

மீண்டும் நான் தலைப்புக்குள் வந்துவிடுகிறேன். இங்கே சிறைக்கொட்டகைகளில் இருப்பவர்கள் குற்றவாளிகளோ வெளியே இருப்பவர்கள் உத்தமர்களோ கிடையாது என்பது நான் சொல்லிப்புரிய வேண்டிய அவசியம் எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் இருக்காது. அதனால்தான் சொல்கிறேன். எங்கோ ஒரு சிலர் தண்டிக்கப்படுகிறார் என்றால் அவர் செய்த அநீதி பெருவாறு குற்றவாளி சமூகத்தின் முன் தன் மனசாட்சிக்குப்புரம்பாக நடக்கவிரும்பாமல். அயோக்கியத்தனத்தொடு சமாதானம் செய்து கொள்ளத்தெரியாத தேசிய பாஷையில் சொல்லப்போனால் பிழைக்கத்தெரியாதவன். அவன் தனிமைப்படுவான். துயரப்படுவான், பல சோதனைக்கு ஆளாவான். ஆனால் தனி மனிதனாகமாட்டான். அழிந்தாலும் அவன் கொள்கை வாழும். எனவே அப்படிப்பட்ட தனிமனிதனை அளிக்க நினைத்த எத்தனைபெரிய சமூகமும் வென்ற சாட்சி எந்த சரித்திரமும் இல்லை. அவன் தூக்கில் ஏறினாலும் அது அவனுக்கு தொடக்கமாக இருக்குமே அல்லாது முடிவாகாது.

—-அப்படிப்பட்ட தனிமனித சமூகவாதிகளைப்பற்றிய பார்வையை தொடர்வோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s