வறுமைத்திருவிழா

எமது பிறப்புரிமை, குடி உரிமை, Uncategorized

ஜனநாயகச்சிறப்புரிமை எமது பிறப்புரிமை

1+

வறுமை திருவிழா

images

ஜனநாயகச்சிறப்புரிமை எமது பிறப்புரிமை

 

 

திசைதோறும் வசை “மாரி”

ஜனநாயக திருவிழா

கலைமிகு பாடல்கள் – அவர்

தம் நிலைமையை மறக்க

கலவையாய் மருந்துகள்

நாடெங்கும் திருவிழா

நாற்புறமும் கச்சேரி

 தோழனோடு தோழன்

உடன்பிறப்போடு உயிர்ப்பிறப்பு

ரத்தத்தோடு ரத்தமாய் 
சத்தத்தோடு சத்தமாய்

இணைந்து பிணைந்து

தலைமையை பணிந்து

பகைவனைச்சினந்து

மயக்கம் தந்த மகிழ்ச்சி

சிரிப்பூட்டும் சிந்தனைகள்

சிலிர்ப்பூட்டும் கனவுகள்

கரை படியாத கைகளோடு

 கரையிட்ட வேட்டி கனவுகள்

கவருக்குள்  அமவுண்டு – நாளைய  

 கவர்மண்டை தீர்மானிக்க 

கரை சேர்க்க உதவுமா?- அல்லது

திரை மறைவில் உரையுடன் – நிற்கும்  

தோழனின் கரங்களில் முடங்குமா?

பறை சாற்றி – கூற முடியாத

பாரம்பர்ய ரகசியம்

நான்கு சுவருக்குள்  நடப்பதை

நாகரீகமாய் பேசமுடியாத

வேட்பாளனின் தவிப்பு  

இசைப்பாடல்கள் அனைத்தும்
வசைப்பாடல்களானது -அந்த
வசைப்பாட்டுக்கு உடனடியாய்
எசப்பாட்டு மெட்டு தயார்
இயக்கியவன் செம்மொழிக்காரன் என்றல்ல 
எம்மொழிக்கு இலக்கியம் படைக்கும்
பன்மொழிப்புலவர்கள் தம்
பாட்டுப்புலமையோடு – தேசியப்
“பண்”பாட்டின் தரத்தையும்

பணப்பாடலால் பயங்கரமாய்
படாத பாடு படுத்தினான்

ஆயிரம் கார் பவனிக்கு

தற்கால விடுப்பளித்து
கற்கால நடைமுறையாய் – சில
ஆயிரம் கால்கள் வலம்வந்தன

சாஷ்டாங்கமாக விழ

லட்சம் கால்களைத்தேடின  

பாதத்திற்கு மதம் இல்லை -அவர்

எம்மதமாயினும்

சாஷ்டாங்கத்திற்கு சம்மதம்

பாதம் படிதல் -அது

வெற்றிக்கு வேதமாகும் 

“சேறு”களில் நடந்து
அங்கே புதைந்து கிடக்கும்
சேரிகளைக்காண்போம்
 -அவற்றை

“சோறு” கொண்டு மீட்போம்!

கணநேர ஜனநாயகம் 

பசியான வயிற்றுக்கு

ருசியான உணவு

ஐந்தாண்டு தாங்குமா?

பாழும் பசி ஒரு நாளும் ஒழியாது

இருநாளைக்கும் ஏலாது

நாளைய நோவு புரியாமல்

நாவு சுவைத்தது – சோமபானம்

நாளையை மறைத்தது – அது 

தாகத்தை மட்டுமல்ல – எல்லா

தாக்கத்தையும் மறக்கும்    

தரையில் பாதம் பதிக்காமல்

மக்கள் தலையில்- பாதித்தவர்களை
ரத யாத்திரை – என்று
மத யாத்திரை செய்தவர்,
அதன் தொடர்ச்சியான – பல

சவ யாத்திரைகள்
கணக்குப்பார்க்க நேரம் ஏது?

ஆரத்தி எடுத்தவர்களுக்கு

தெரு  ஓரத்தில் பணம் 

ஐந்தாண்டு தலைநகரில் 
தவம் இருந்து இன்னும் ஐந்தாண்டு 
மக்கள் பணியாற்ற – வரம் கேட்டு
உங்கள் வாசல் வரும் உணர்ச்சி திருவிழா

அறியாத மக்களுக்கு- “முதல்”மரியாதை கிடைக்கும்.

“முதல்” போட்ட மனிதனுக்கு   பதில் மரியாதை “ஓட்டு”

தலைவனை புகழ்ந்து

தலைகால் புரியாமல்  மகிழ்ந்து

ஊரெங்கும் விழா திசைதோறும் வசை “மாரி”

இசைப்பாடல்கள் வசைப்பாடலாய்

வலம் வந்ததன – அந்தவசைப்பாட்டும்

எசப்பட்டாகி மிரட்டின

கடந்த காலக்கசப்புகள் -மறந்து

கலந்து நிற்கும் கூட்டணி

வாக்குக்கேட்டு அனற்றித்திறிந்த  வாகனங்கள் 

வாருங்கள் வாக்களிக்க

வாக்குச்சாவடியை நோக்கி

வந்தோம் சாவடிக்கு

வாருங்கள் என்றவர்கள் வாரிவிட்டார்கள்

வாருங்கள் என்றவர்கள் !

பணத்தை வாரினார்கள்!

பிணக்கால் நாறினார்கள்!-பின்

நம் காலை வாரினார்கள் !

 சொல்லித்தானே அழைத்தோம்

சாவடியில் வாக்கு என்றவர்கள்-நம்மை

“சாவடிக்க” வாக்குக்கேட்டது- அவர்கள்

சிலேடை நயம்  என்று உரைத்தது!  

அப்படியானால் எங்கள் நிலைமை?

பொறுமை! பொறுமை!

கையில் பூசிய “மை”- அது

“கை” “மை” மட்டுமல்ல

அதுதான் அரசியல் கயமை.

“கை” மையின் கருமை போனாலும்

 வறுமையும், வெறுமையும்

உங்கள் உடனிருக்கும்

நாங்கள் அருமை பெருமையாய் 
அழைத்துவந்தது பதுமையல்ல 
மக்களுக்கு எல்லாம் புதுமைதான்

நிஜத்தில் அது முலாம் பூசிய முதுமை

இளமையின் பிரதி

வாய் “மை”, கண்”மை”, தலை”மை”

அனைத்தும் பொய் “மை”-என்ற  

 உண்மை மறந்து தன்னை மறந்து

 “மெய்” ப்பல் தெரிய

“பொய்”ப் பல் (ப) முதுமையை ரசித்து  

வாய் ”மை”யை ரசித்தவர்கள்

அது வாய்மையா? – என  

பார்க்காதது யார்தவறு?

கையில் மைக்கோடு

கை “மை” வைக்க

கேட்டதெல்லாம் கயமை 

புத்தனே வந்தாலும்

நித்தமும் வந்தாலும்

மெஞ்ஞானம் இனி இல்லை 

“வாக்கை சாவடித்து”

நீங்களும் உங்கள் வாக்கை

நிறைவேற்றி விட்டீர்கள்

“சாவடி(ப்பில்)யில்” நம் கணக்குத்தீர்ந்தது  

கை “மை” போய்விடும்

கயமையும் மறந்துவிடும் 
கை மை பூசலோடு

 நீங்கள் அறியாமலே – இலவசமாய்

வறுமை உடன் இருக்கும்!

சில நூறு பணங்கள் பல நூறு

காலத்தை மறக்கடிக்கும்

வறுமையின் அருமை-கருமை

பூசுபவர்களின் கருணைக்கு புரியும்!

ஜன  நாயகம் பற்றி, ஜன நாயகன் – நீ

அறியாது போனால்

கண நேர மன மாற்றம்

முழு வாழ்வும் தடுமாறும்!

பணம் நாம் பசியாறுவதற்கல்ல    

பணம் நம்மை பசியாறிவிடும்

நடை பிணமாக்கி வறுமைக்கு பலியாக்கும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s