தனிமரம் பாகம் : 1

பண்ணிங்களும் "சிங்கிளா" வர்றது உண்டு

தனிமரத்தோட்டங்கள்

தனிமரங்கள்

புதனிமரம் தோப்பாகுமா? என்று கேட்போர் மத்தியில் தனிமரச்சோலை என்ற வார்த்தை சற்று புதிராய் இருக்குமதிதாகவும் இருக்கும். ஆனால் உண்மைஅது எதார்த்தமாக எடுத்துக் கொண்டா1லும், தத்துவமாய்ப்பார்த்தாலும், விஞ்ஞான அடைமொழிகொண்டு ஆராய்ந்திடினும் அதுவே நிஜம். தனிமரம் சோலையாக மட்டுமல்ல நந்தவனமாகவும், அடர்ந்தவனமாகவும், சில நேரங்களில் பாலைவனமாகவும் மாறுவதில் மட்டும்தான் பிறசமூகப்பங்கு உண்டு. அல்லாது தனிமரங்கள்தான் தோப்பாக மேற்சொன்ன எல்லாமாக திகழ்கிறது. இதை என் இப்போது சொல்ல வேண்டும் என்ற உங்கள் மனதில் எழும் கேள்வி புரியாமலில்லை.

அதைச்சொல்வதற்குத்தானே இந்தத்தலைப்பும் கட்டுரையும். உலகின் அனைத்து உயிர்களிலும் ஒரு “செல்” உயிரியான அமீபாவில் இருந்து தோன்றியது விஞ்ஞானக்கூற்றென்பதால் ஒரு மரம்தான் ஒரு தோப்பையும் , அனைத்து உயிரினத்தையும் உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. சமூகமாக இருப்பதில் பெரும் கூட்டுப்பலன்தான் தனிமரம் தோப்பாகாது என்று கூறக்காரணமான  காரணி. ஆனால் அது மனித சமூகத்தைப்பொருத்தவரை அவர்களின் ஒற்றுமையை மனதில் கொண்டே அந்தக்கருத்து எத்தனை தூரம் சாத்தியமாகும் என்பது கவனிக்கத்தக்கது. இங்கே ஜனநாயகம் என்பது பெரும்பான்மை அல்லது வெகுஜன விருப்பம் சார்ந்தது. வெகு ஜனம் விரும்புகிற ஒன்று,அல்லது அவர்களால் ஆதரிக்கப்படும் செயல் அது நிஜமானதாகவோ, நேர்மை, உண்மைகள், நிறைந்ததாகவோ இருக்க வேண்டும். அதுதான் சரியானது என்று கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் மேலை நாடுகள் எனப்படும் ஐரோப்பியநாடுகள், நாகரீக, பொருளாதார வாழ்வியல் தேவைகளில் முன்னேறிக்கிடக்கும் சமூகங்கள் தாங்கள் அண்டை நாடுகளுடன் பெரும்பாலும் நல்லுறவு பேணும் மனம் கொண்டவர்களாக உள்ளனர். அண்டை தன்னைப்போல் நேசிக்க அவர் இன்பதுன்பங்களை அவரது மன நிலையில் பார்க்கும் தொலை நோக்கு ஆகியவையே அவர்களின் முரண்பாடற்ற தன்மைக்கு உரமாகிறது.

“ஒரு சமூக அமைப்பில் பலகீனன்  செய்த தவறைத்தட்டிக்கேட்கும் கிராம நியாயமாக இருக்கட்டும், அரசியல்வாதி ஐந்து ஆண்டு பூலோக சொர்க்கத்தில் வாழ்ந்து அவன் முகம் மறந்து பின்னர் இவன்தான் நமது மக்கள் பிரதிநிதி. நமது வாழ்வுரிமைக்காக தேசத்தின் தலைநகரில் வெயிலிலும் பணியிலும் அலைந்து நம்மை செழிப்புறச்செய்தவன் என்று நினைவில் கொண்டு வரும்போது நம் உணர்வில் கோபமோ, மகிழ்ச்சியோ,எந்தப்பிரதிபலிப்பும் இல்லாது அப்போது எவ்வளவு பணம் கிடைக்கிறது என்று பார்த்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம் சுயமரியாதை, உரிமைகள், தேசத்தின் இறையாண்மை எல்லாமும் சேர்ந்து விற்பனைப்பொருளாக்குவதிலாக இருக்கட்டும் நமது சிந்தனையும் பார்வையும் மிகக்குருகலானது.  இதுபோன்ற இடங்களில் சுயமரியாதைமிக்க மிகச்சில  தனிமனிதன் மட்டுமே அங்கு வாழ்கிறான். சமூகம் என்ற கூட்டுச்சோலை தடம் புரழ்கிறது. “தனிமனிதன்” என்று நாம் சொல்பவர்கள் சில மனிதர்களாக இருந்தாலும் சுயமரியாதை மிக்க கொள்கைக்காக வாழும் தனிச்சமுதாயமாகவும், நாம் குழுவாக, சமூகமாக வாழ்ந்தாலும் நம் உரிமைகள், தன்மானம், சுயமரியாதை ஆகியவற்றை அற்பப் பொருளுக்காக பகுத்தறிவையே துறந்து  கால்நடைகளைவிடக்கேவலமாகி விடுகிறோம்.

“மனித உரிமை மீறல்” எனும் பதம் கூட்டமான சமூகம், அல்லது அதிகாரம் பொருந்தியவர்கள் பலம் குறைந்த தனிமனிதனின் நியாயங்களைப் புறக்கணிப்பதில் இருந்து பிரந்தசொல்லாகும்.  எனவே பாரதி “தனி ஒருமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றான். சுயமாரியாதை உள்ளவன் தனது நியாயத்தை கேஞ்சிக்கேட்கமாட்டான் என்பது பாரதியின் நெருப்பு வரிகளில் தெரியும்.

—-இனி வரும் பகுதிகளில் தனிமனிதன் யார் அவனது மனித குலத்திற்கு ஆற்றவேண்டியபங்கு என்ன என்பதைப்பார்ப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s