புதியமனிதன்

Winterஅகண்டவெளி ஒரு பார்வைஇந்த BLOGGER வாயிலாக நிறைய அறிவு சார்ந்தவை தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி. தொடர்ந்து நண்பர்கள் கொடுக்கும் ஆதரவே நமது எதிபார்ப்பு அதுவன்றி வேறு ஆதாயம் அல்ல!

  • அண்டம் என்று சொல்லப்படும் அடியும் முடிவும்தெரியாத அகண்ட இந்தப்பேரண்டமானது   முடிவின்றி விரிவடைகிறது என்ற பல நூற்றாண்டு ஆராய்ச்சிகள் தற்போது ஒரு மிக முன்னேறிய விஞ்ஞான எல்லையை எட்டியுள்ளது.  இந்தப்பேரண்டத்தின் ஒவ்வொரு கோள்கள், நட்சத்திரங்கள், கண்ணுக்குத்தெரியும், அல்லது தெரியாத அனைத்திற்குமே ஒரு நிறை (Weight) உண்டு என்ற கருத்து பல்வேறு விஞ்ஞான நபர்கள் கூறிவந்தபோதும் 2012 -ல் தான் அது “பீட்டர் ஹிக்ஸ்” என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டு ஆராய்ச்சி நிரூபணம் செய்து அதற்கு “போஸான்” எனப்பெயரிட்டார். அதுவே “ஹிக்ஸ் போசான்” எனப்பட்டது. கடவுள் துகள் (Gods Particle) அனைத்திற்கும் மூலமானது என்றும் இதனைக் கூறினர்.  அதனைத்தெரிந்து கொள்ள பகுத்தறிவு உயிரினமான மனித வர்க்கம் தனது அதிகபட்ச ஒரு கிலோ எடையுள்ள மூளையை கசக்கிப்பிளிந்து    கொண்டு கிடக்கிறது. இந்தக் கண்டு பிடிப்பானது 2013 -ல் “பீட்டர் ஹிக்ஸ்” உள்ளிட்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு “நோபல் பரிசு” பெற்றுத்தர வழி வகுத்தது. இப்படி முன்னோக்கி நகர்த்திச்சென்ற அண்டத்தின் ஆய்வை அதன் பின் புறமாய் ஆராய்ச்சி செய்தால் என்ன என்று “ஆலன் குத்” உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் அதனை  சுமார் 1380 கோடி ஆண்டுகளுக்குமுன் பிரபஞ்சமானது, இன்று இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்து நிறைகளையும் உள்ளடக்கியதாக, (அதாவது நாம் வாழும் பூமி,  உள்ளிட்ட சூரியக்குடும்பம், )பால் வெளி எனும் (Milky Way ) அனைத்தையும் உள்ளடக்கிய இன்னும் திட திரவ வஸ்துக்கள், வாயுக்கோள்கள், இவற்றையெல்லாம் விடப்பன்  மடங்கு பெரிதான எரியும், எரியாத, பல கோடி ஒளியாண்டு தூரத்தில் இருப்பவை அனைத்தும் இன்னும் விரிவடைந்த  செல்கின்றன. என்றவர்கள் அத்தோடு நில்லாமல் அப்போது (அதாவது 1380 கோடி ஆண்டுகளுக்கு முன்)   ஓர் அணுவைவிடவும் சிறிதாக இருந்து (Big Blast ) எனும் பெருவெடிப்பின் மூலம் உருவானவையே இந்த விரிவடைந்து கொண்டிருக்கும்  நாம் பார்க்கக்கூடிய (sorry பாக்க முடியாத பேரண்டம்)  என்று கூற்றை முன்வைத்து நடத்திய ஆய்வால் “ஆலன் குத், ஆண்ட்ரெய் லிண்டே” ஆகியோருக்கு இந்த ஆண்டின் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.  இன்னொரு சாரார் அகிலம், அண்டம், சூரிய நட்சத்திரக்கோள்கள் இன்னும் விஞ்ஞானத்தாலும் மெஞ்ஞானத்தாலும் தேடமுடியாத பலவற்றை என்ன என்றே அறியாத அறிய விரும்பாத ஒரு இனமாக  ஆறறிவு எனும் வரையறைக்குள் மனிதன் போன்ற தோற்றத்தில் இருந்து கொண்டு இவையா நம் பசியை ஆற்றி  நமக்கு உணவளித்து விடப்போகிறது, எனும்  தன்  ஒரே (நியாயமான) சித்தாந்தப்போக்கில் முடங்கிக்கிடக்கின்றனர்.  நாம் இந்தத்தளத்தில், விண்ணியல், மண்ணியல், அறிவியல், அரசியல், உளவியல், வாழ்வியல், தொழில் நுட்பவியல், பொருளியல், உள்ளிட்ட  நம் தேசத்தின் அனைத்தையும் அத்தோடு  வரலாற்று ஆன்மீக, சித்தாந்த இலக்கணங்களையும் ஆராய்வதோடு அதில் மக்களுக்கான வழி காட்டுதல் ஆலோசனைஆகியனபற்றிய பல்வேறு பட்ட பரிமாண ஆய்வுகளையும் ஜனரஞ்சகமாய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற நோக்கில் பயணப்பட்டாலும். மையப்புள்ளி என்பது நமது தேசியவாத சித்தாந்தத்தில் 121 கோடித்துளிகளில் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதை நமக்கு நாமே தேடிக்கண்டு பிடித்து அறிந்து கொள்வதே தலையாய நோக்கம். அதில் நாம் யார், நமது கடமை என்ன?. நம் உரிமை எங்கு பறிக்கப்படுகிறது. நம் பயணப்பாதையில் எங்கெங்கெல்லாம் திருப்பு முனைகள் நிகழ்கின்றன. நாம் எப்படி ஏமாற்றப்படுகிறோம்?  எதை இழக்கிறோம்? எதைப்பெறுகிறோம் ஆகியன அலசப்படும். ஐரோப்பிய, ஆஸ்ட்ரேலிய, அமெரிக்க, கண்டங்கள் அல்லாது இவற்றுக்கெல்லாம் மேல் இருண்ட கண்டமாகப்பார்க்கப்பட்ட ஆப்பிரிக்ககண்டங்கள், அண்டார்டிக்க கண்டங்கள் ஆகியவற்றினபல  நாடுகள் கண்ட விழிப்புணர்வு பொருள் தொழில் துறை முன்னேற்றங்களின் மத்தியில் நமது வளர்ச்சியின்மை, சுதந்திரத்திற்குப்பின் எந்த தந்திரம் நம்மை ஆள்கிறது ஆகியன பற்றிய பல்வேறு சிந்தனைத்தூண்டல்களும் அலசலும் தான் இதன் நோக்கம் எனினும் அது அறிவு சார்ந்த தர்க்கமாக இருக்க வேண்டும்.  ஆசியா நோய்வாய்ப்பட்ட கண்டமல்ல. இங்கே செல்வச்செழிப்பு மிக்க, ஜப்பான், சீனா, சோவியத் யூனியனின் பகுதிகள், சிங்கப்பூர், மலேசிய, தைவான், கொரியா,  அதனடியில் எண்ணெய் கொண்ட மத்திய கிழக்கு நாடுகள் நம்மைவிடபன்மடங்கு  ஆகியன வளத்தோடு  செழுமை பெற்றுத்திகழ்வது எப்படி என்று நம்மை சிந்திக்க வைக்கின்றன. உலகின் இரெண்டாவது மக்கள் பெருக்கமும் பல்வேறு வளங்களும் வரலாற்றின் பக்கங்கள் எங்கிலும் உலகையே அண்ணாந்து பார்த்து சிலிர்க்க வைத்தாலும் இன்றும் எண்பது சதவீத மக்கள் வறுமைக்கோடு எனும் அன்றாட  அத்தியாவசிய உணவுத்தேவை சராசரிக்குக் கீழே வாழும் பரிதாபம் எப்படி சாத்தியமானது என்று பார்ப்போம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s